தமிழ் புத்தாண்டு நாளில் 17 குழந்தைகள் பிறந்தன
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தமிழ் புத்தாண்டு நாளில் 17 குழந்தைகள் பிறந்துள்ளன.
திருவாரூர்;
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தமிழ் புத்தாண்டு நாளில் 17 குழந்தைகள் பிறந்துள்ளன.
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி
திருவாரூர் மாவட்ட கலெக்டா் அலுவலகம் பின்புறத்தில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவை மேற்கொள்ளபட்டு வருகிறது.
17 குழந்தைகள்
இந்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தினமும் சுகபிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. அதன்படி தமிழ்புத்தாண்டு நாளில் 17 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் 11 ஆண்குழந்தைகளும், 6 பெண் குழந்தைகளும் அடங்கும்.10 குழந்தைகள் சுகபிரமுறையிலும், 7 குழந்தைகள் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்துள்ளன என்று மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், தமிழ்புத்தாண்டு நாளில் குழந்தை பிறந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.