சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாமில் 1,669 மனுக்கள் பெறப்பட்டது

ஊசூரியில் நடந்த சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாமில் 1,669 மனுக்கள் பெறப்பட்டது

Update: 2022-06-06 13:04 GMT

அடுக்கம்பாறை

வேலூரை அடுத்த ஊசூரில் சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், சப்- கலெக்டர் பூங்கொடி, வேலூர் தாசில்தார் செந்தில், அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்துகொண்டு குறைகேட்பு முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் கருகம்பத்தூர், கீழ்மொணவூர், மேல்மொணவூர், அன்பூண்டி, அப்துல்லாபுரம், செம்பேடு, சதுப்பேரி, சிறுகாஞ்சி, குப்பம், சேக்கனூர், ஊசூர், தெள்ளூர், அத்தியூர், புலிமேடு, பூதூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் பாலமதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்த முகாமில் 1,669 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் மாவட்ட கவுன்சிலர் பாபு, ஒன்றியக் குழு துணை தலைவர் மகேஸ்வரிகாசி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சன்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயகுமாரி கண்ணன், மாலதிசுரேஷ்பாபு, தேவி சுரேஷ், அண்ணாமலை, கவிதாசிவகுமார், விஜயலட்சுமி முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்மு பாலகிருஷ்ணன், குமார், ஊசூர் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்