16 பெண் போலீசார் வரவேற்பாளர்களாக நியமனம்

நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் 16 பெண் போலீசார் வரவேற்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

Update: 2023-04-29 20:05 GMT

நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் 16 பெண் போலீசார் வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வரவேற்பாளர்களாக நியமனம்

தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவுப்படி, நெல்லை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக 16 பெண் போலீசார் வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி நேற்று மாநகர போலீஸ் அலுவலகத்தில் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநகர கமிஷனர் ராஜேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் தலைமையிட துணை கமிஷனர் அனிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

போலீஸ் வாகனங்கள் ஆய்வு

முன்னதாக நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அவர், போலீசாரின் குறைகளை கேட்டறிந்து, போலீஸ் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை மாதாந்திர ஆய்வு செய்தார். இதில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்