புகையிலை பொருட்கள் வைத்திருந்த 16 கடைகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் வைத்திருந்த 16 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி உத்தரவின் பேரில், சுகாதாரத் துறையினர், மாவட்ட புகையிலை ஆலோசகர் ஆகியோர் முன்னிலையில் கே.வி.குப்பம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கடைகளில் புகையிலை, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள், புகைஇலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 16 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அப்போது, சிகரெட்டுகளைச் சில்லரை விலையில் விற்பனை செய்யக்கூடாது. பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்றும், புகை இலையினால் வரும் பாதிப்புகளை விளக்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா, போலீசார், பஞ்சாயத்து செயலாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.