சிவகிரியில் திருவிழா கூட்ட நெரிசலில் 4 பெண்களிடம் 16 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-06-15 12:10 GMT

சிவகிரி:

கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவிழா கூட்டம்

தென்காசி மாவட்டம் சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

அப்போது கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொண்டு மர்ம நபர்கள், 4 பெண்களிடம் நகைகளை திருடிச்சென்றனர்.

16 பவுன் நகைகள்

புளியங்குடி சிந்தாமணி இல்லத்து பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சரோஜா (வயது 40) என்பவரிடம் 6 பவுன் தங்கச்சங்கிலியையும், சிவகிரி குமாரபுரம் 18-வார்டு மேலத்தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி பாஞ்சாலி (45) என்பவரிடம் 5 பவுன் தங்க செயினையும், வாசுதேவநல்லூர் வன்னிய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி மனைவி சுந்தரி (65) என்பவரிடம் 2 பவுன் தங்க செயினையும், சிவகிரி மலைக்கோவில் தெரு 2-வது சந்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாஞ்சாலி (23) என்பவரிடம் 3 பவுன் தங்கச் செயினையும் திருடி சென்றனர். மொத்தம் 16 பவுன் நகைகள் திருட்டுப்போனது. இதன் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் 4 பேரும் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தினார். நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்