பாலிதீன் பை நிறுவனத்தில் ரூ.16½ லட்சம் மோசடி
பாலிதீன் பை நிறுவனத்தில் ரூ.16½ லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் பேராலி ரோட்டில் பாலிதீன் பைகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் ஈரோட்டை சேர்ந்த நடராஜன் வாசுதேவன் என்பவர் ரூ.16 லட்சத்து 42ஆயிரத்து 351-க்கு பாலிதீன் பைகள் வாங்கிக் கொண்டு அதற்காக 2 காசோலைகளை கொடுத்து சென்றுள்ளார். ஆனால் இந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து விருதுநகர் தனியார் நிறுவன மார்க்கெட்டிங் மேலாளர் கலைச்செல்வன் ஈரோட்டிற்கு சென்று நடராஜன் வாசுதேவனிடம் பணம் கேட்டபோது யாராவது பணம் கேட்டு ஈரோட்டிற்கு வந்தால் உயிரோடு விடமாட்டேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனியார் நிறுவன மேலாளர் கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நடராஜன் வாசுதேவன் மீது மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து பாண்டியன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.