போலீசாரின் குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சம் நிதி உதவி

பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-06-10 19:42 GMT

மதுரை,

மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் மணிகண்டன் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த 2010-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவரது குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு அவருடன் 2010-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காக்கும் கரங்கள் குழுவைச் சேர்ந்த போலீசார் அனைவரும் சேர்ந்து சுமார் ரூ.16 லட்சம் வரை நிதி திரட்டினர். அந்த நிதியினை மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் முன்னிலையில் மணிகண்டன் குடும்பத்தினருக்கு நேற்று காலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் பிரதீப், மங்களேஸ்வரன் மற்றும் காக்கும் கரங்கள் குழுவைச் சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்