நாய்கள் கடித்து குதறியதில் 16 ஆடுகள் சாவு

நாய்கள் கடித்து குதறியதில் 16 ஆடுகள் செத்தன

Update: 2023-06-25 20:24 GMT

தா.பேட்டை:

நாய்கள் கடித்து குதறின

தா.பேட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கோணங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் விவசாய வேலை செய்து வருவதோடு, ஆடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது தோட்டத்தில் உள்ள பட்டியில் நேற்று சுமார் 20 ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். இந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 நாய்கள் பட்டிக்குள் திடீரென புகுந்து ஆடுகளை கடித்து குதறின. இதில் 16 ஆடுகள் பரிதாபமாக செத்தன. 4 ஆடுகள் மட்டும் உயிர் தப்பின.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நாய்கள் கடித்து ஆடுகள் பலியான சம்பவத்தை அறிந்த மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன், விவசாயி ராஜேஷ்கண்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்