பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்

பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-07 19:01 GMT

திமிரி வட்டாரத்தில் சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் நெல் பயிர்களுக்கு எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தும். அதால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருவாய் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பாரதப் பிரதமரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திமிரி வட்டாரத்தில் உள்ள 71 கிராம விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும். ஒரு ஏக்கருக்கு ரூ.495 வீதம் செலுத்த வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றுடன் பதிவு செய்து, ரசீது பெற்று அதனை வேளாண்மை அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்