கிராம உதவியாளர் பணிக்கு 1,587 பேர் தேர்வு எழுதினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 1,587 பேர் தேர்வு எழுதினர். 640 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2022-12-04 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 1,587 பேர் தேர்வு எழுதினர். 640 பேர் தேர்வு எழுத வரவில்லை.

எழுத்து தேர்வு

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் கலெக்டர் கூறியதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுகாக்களில் தேர்வு நடந்தது.

1,587 பேர் எழுதினர்

இந்த தேர்வை எழுத 2 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,587 பேர் தேர்வு எழுதினர். 640 பேர் தேர்வு எழுத வரவில்லை.இதை தொடர்ந்து திறன் தேர்வு இந்த மாதம் 15-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தேர்வு எழுதியுள்ள அனைவரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திறன் தேர்வு தாசில்தார் தலைமையில் குழு அமைத்து நடைபெற உள்ளது. இதில் தேர்வு எழுதியவர்கள் நேரில் வந்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா. மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்