தூத்துக்குடியில் சாலைமறியிலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியினர் 154 பேர் கைது

தூத்துக்குடியில் சாலைமறியிலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியினர் 154 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 18:45 GMT

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று சாலை மறியல் பேராட்டம் நடந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ராஜா, சண்முக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சங்கரன், பா.ராஜா, எம்.எஸ்.முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த தென்பாகம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 154 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்