ஆனி மாத வெள்ளியை முன்னிட்டு 1,501 பெண்கள் பால்குட ஊர்வலம்

குடியாத்தம் ெகங்கையம்மன் கோவிலுக்கு ஆனி மாத வெள்ளியை முன்னிட்டு 1,501 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.

Update: 2023-07-14 11:59 GMT

குடியாத்தம்

குடியாத்தம் ெகங்கையம்மன் கோவிலுக்கு ஆனி மாத வெள்ளியை முன்னிட்டு 1,501 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.

அதன்படி ஆனி மாத கடைசி வெள்ளியான நேற்று கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை| களும், அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து 1501 பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவில் வளாகத்தில் ஆணி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு வேப்பிலைக்காரி அம்மனாக பக்தர்களுக்கு கெங்கையம்மன் காட்சியளித்தார்

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு மற்றும் விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்