கோவையில் 1,500 போலீசார் பாதுகாப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டல்களில் சோதனை நடத்த 8 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டல்களில் சோதனை நடத்த 8 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
குடியரசு தின விழா
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை மறுநாள் (வியாழக் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை ரெயில் நிலையம், காந்திபுரம் டவுன் பஸ்நிலையம், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த 8 தனிப்படை அமைக்கப் பட்டு உள்ளது.
அவர்கள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்கியுள்ள நபர்களின் விபரங்களை சேகரிப்பார்கள். இதில் சந்தேக நபர்ககளிடம் விசாரணை நடத்தப்படும்.
டிரோன் மூலம் கண்காணிப்பு
கோவை மாநகர் போலீஸ் சார்பில் தற்போது டிரோன்கள் மூலம் மாலை நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
குடியரசு தினத்தன்று கோவை வ.உ.சி. மைதானத்தையும் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர கோவை மாநகரில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாகன சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் வகையில் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.