அரசு பள்ளியில் 1,500 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-09-15 18:22 GMT

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 1,500 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன், பள்ளி செயலாளர் ஜான்வில்லிங்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அருகில் 1,500 பனைவிதைகள் நடப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தி.மு.க. நகர செயலாளரும், வெற்றி தமிழர் பேரவை தலைவருமான கார்த்திவேல்மாறன் கலந்துகொண்டு பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், தூய்மை அருணை காவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை அருணை சேவை மையம் தலைவர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்