150 மோட்டார் சைக்கிள்களை உடலில் ஏற்றி வாலிபர் சாதனை

பந்தலூர் அருகே 150 மோட்டார் சைக்கிள்களை உடலில் ஏற்றி வாலிபர் சாதனை படைத்தார்.

Update: 2023-09-18 22:00 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவர் கராத்தே பயிற்சி பெற்று உள்ளார். அவர் தனது உடல் மீது மோட்டார் சைக்கிள்களை ஏற்றும் முயற்சிக்காக கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்தார். இந்தநிலையில் நேற்று சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சதீஷ் மைதானத்தில் தரையில் மேல் நோக்கி படுத்து இருந்தார். அவரது உடல் மீது 150 மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து ஏறியபடி சென்றன. ஏற்கனவே மும்பையை சேர்ந்த ஒருவர் உடலில் 121 ேமாட்டார் சைக்கிள்களை ஏற்றி சாதனை படைத்து இருந்தார். இதையடுத்து சதீசின் சாதனை கின்னஸ் சாதனை பட்டியலுக்கு அனுப்பப்பட உள்ளது. அவரை பொதுமக்கள் பாராட்டினர். முன்னதாக நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. திராவிட மணி, சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி, துணைத்தலைவர் சந்திர போஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்