2 வாகனங்களில் கடத்த முயன்ற 15½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்த முயன்ற 15½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கடை:
கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்த முயன்ற 15½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாகனங்கள் மூலம் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
15 டன் ரேஷன் அரிசி
இந்தநிலையில் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால், தனி வருவாய் ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் நாகராஜன் ஆகியோர் புதுக்கடை அருகே உள்ள எட்டணி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினர். உடனே, டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, அதில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அதிகாரிகள் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், லாரியை புதுக்கடை போலீஸ் நிலையத்திலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பிேயாடிய டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ேவர்க்கிளம்பியில்...
இதேபோல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் சிவபாண்டியன், ஏட்டு ஜெயசிங் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வேர்க்கிளம்பி பகுதியில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவுக்கு காரில் கடத்த முடியன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.