ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை

பெண்ணாடம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-05 18:45 GMT

பெண்ணாடம்:

பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தரசோழபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நல்லபிள்ளை. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகள் வைஷ்ணவி(வயது 38). இவரது அத்தைக்கு புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக வைஷ்ணவி, வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. அதனை சிலர் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

5 பேருக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். பின்னர் அவர், இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், சவுந்தரசோழபுரத்தை சேர்ந்த இளங்கோவன், இவரது மகன்கள் பிரசாந்த், சிவா, அருள் ஆகியோர் ரவி மகன் பாலமுருகன் உதவியுடன் நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளங்கோவன் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்