15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது செய்தனர்.

Update: 2022-10-01 18:52 GMT

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மாங்குடி, மேட்டுக்கடை பகுதிகள் வழியாக புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி செய்தனர். அதில் 15 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை கடத்தி கொண்டு சென்ற மாங்குடி வடக்குதெருவை சேர்ந்த கரிகாலன் (வயது 55), குளத்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.7 ஆயிரம், 3 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய பேராம்பூரை சேர்ந்த பெரியசாமி என்கிற மதி (33) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்