பஸ்சில் கடத்தி வந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பஸ்சில் கடத்தி வந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ் வந்தது. அதில், ஏறி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் 3 டிராவல் பேக்குகளில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.