மினி வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

ஆரணி அருகே மினி வேன் கவிழ்ந்து 15 போ் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-19 16:26 GMT

ஆரணி அருகே மினி வேன் கவிழ்ந்து 15 போ் காயம் அடைந்தனர்.

மினி வேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 68). இவர், நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

இதனையடுத்து கல்லேரிப்பட்டு கிராமத்தில் இருந்து முனியம்மாளின் உறவினர்கள் 15 பேர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று காலையில் நெசல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரவி என்பவருக்கு சொந்தமான மினி வேனில் சென்றனர். மாலையில் அனைவரும் அதே வேனில் வீடு திரும்பினர்.

ஆரணியை அடுத்த தச்சூர் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

15 பேர் காயம்

இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். இதில் எழிலரசன், முருகன், தஞ்சையம்மாள் ஆகியோர் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

மேலும் ஆரணி அரசு மருத்துவமனையில் கண்ணதாசன், மஞ்சுளா, ஷாலினி, மண்ணு, கருணாகரன், சரவணன், செல்வம், ரேவதி, குப்பு உள்பட 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மேலும் கற்பகம், செல்வி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்ததால் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்