லாரி மீது பஸ் மோதி 15 பேர் படுகாயம்
லாரி மீது பஸ் மோதி 15 பேர் படுகாயம் அடைந்தனர். லாரியில் இருந்து மாங்காய்கள் ரோட்டில் சிதறின.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 40), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மண்டிக்கு, லாரியில் மாங்காய்களை ஏற்றிக்கொண்டு சென்றார். ஆம்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, லாரி மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது. இதில் லாரி கவிழ்ந்து சாலை முழுவதும் மாங்காய்கள் சிதறின. பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து 5 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சாலையில் சிதறி கிடந்த மாங்காய்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.