நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு தடை உத்தரவு அமல்

நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-09-13 20:14 GMT

நெல்லை மாநகரில் நேற்று நள்ளிரவு முதல் வருகிற 27-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கால கட்டத்தில் அதிகமானோர் கூடுதல், கூட்டம், போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொது மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்