ரூ.15 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி
வேதாரண்யத்தில் ரூ.15 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி நடக்கிறது என்று நகராட்சி தலைவர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம்;
வேதாரண்யத்தில் ரூ.15 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி நடக்கிறது என்று நகராட்சி தலைவர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய தார்சாலைகள்
வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் கடந்த 5 ஆண்டுகள் ஆகியும் பழுதடைந்து கிடக்கும் 11 சாலைகள், ரூ.2 கோடியே 59 லட்சம் செலவிலும், நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 59 லட்சத்தில் 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்சாலைகளை தார்சாலைகளாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நகராட்சி சிறப்பு திட்டத்தின் கீழ் 3 கோடியே 40 லட்சத்தில் புதிய தார்சாலைகள் மற்றும் 15-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சத்தில் பழுதடைந்த சிமெண்டு சாலைகளை சரி செய்யும் பணி நடக்கிறது.
மின்விளக்குகள்
மேலும் 15-வது நிதிக்குழு மூலம் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் சீரமைப்பு என 21 வார்டுகளிலும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகள் ரூ.15 கோடி செலவில் சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நகராட்சி தலைவர் புகழேந்தி கூறினார்.
மேலும் நகரில் உள்ள 534 இடங்களில் ரூ.15 கோடியே 30 லட்சத்தில் மின்விளக்குகள் பொருத்துவதற்கான திட்ட பணிகளும் தொடங்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் இல்லா...
இதேபோல் வேதாரண்யத்தில் நகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி பிளாஸ்டிக் இல்லா நகராட்சியை உருவாக்க பாடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து சான்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகம்மது இப்ராஹீம், வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன், தூய்மை இந்தியா மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.