நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலம் மீட்பு

நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலம் மீட்பு

Update: 2023-02-11 15:59 GMT

போடிப்பட்டி

உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

நகராட்சிக்கு சொந்தமான நிலம்

உடுமலை நகராட்சி பழனி சாலைக்கு அருகில் கல்யாணி அம்மாள் லே அவுட் அமைந்துள்ளது. இங்கு நகர ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10.31 ஏக்கர் பரப்பளவில் உருவான மனைப் பிரிவின் நிலப்பரப்பில் குறிப்பிட்ட அளவு நிலம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. அந்தவகையில் 76.61 சென்ட் சமுதாய நலக் கூடத்திற்கும், 11.69 சென்ட் வாசகர் அறை பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டு வகைப்பாடு செய்யப்பட்டது.

இந்த இடத்தை அதன் உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தை நகராட்சியால் சுவாதீனப்படுத்தப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் இந்த இடங்களை கிரையம் செய்ய வேண்டாம் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

ரூ.15 கோடி

இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடியாகும். இதுபோல உடுமலை நகராட்சியால் மனை பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் ஒப்படைக்காமல் இருந்தால் அவற்றை சுவாதீனப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்