விதிமுறைகளை மீறி இயக்கிய 15 ஆட்டோக்களுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறி இயக்கிய 15 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அன்னதானப்பட்டி:
சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் நேற்று சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, நெத்திமேடு, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்றது, உரிய ெபர்மிட் இன்றி இயக்கியது, தகுதி சான்றிதழ் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து உரிய முறையில் வாகனங்களை இயக்க ஓட்டுனர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அவர்களை அங்கிருந்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சேலம் மாநகர் முழுவதும் இது போன்ற வாகன சோதனை தொடரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.