சரக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா வந்தது
சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா வந்தது.
சென்னை மணலியில் இருந்து 1,458 டன் யூரியா சரக்கு ரெயில் மூலம் தர்மபுரி வந்தது. இந்த உரத்தை ரெயிலில் இருந்து இறக்கி லாரிகள் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது விற்பனை அலுவலர் மேகநாதன், மொத்த விற்பனையாளர் நாதன் ஆகியோர் உடனிருந்தனர். தர்மபுரி மாவட்ட உரக்கடைகளுக்கு 705.15 டன் யூரியாவும், கிருஷ்ணகிரி மாவட்ட உரக்கடைகளுக்கு 752.85 டன் யூரியாவும் பிரித்து அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.