வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 14 சாமி சிலைகள் பறிமுதல் ஒருவர் கைது

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 14 சாமி சிலைகள் பறிமுதல் ஒருவர் கைது.

Update: 2022-07-22 20:54 GMT

தஞ்சாவூர்,

வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக இந்திய தொல்லியல் துறைக்கு சில சிலைகள் பழங்கால சிலைகள் அல்ல என்பதற்கான சான்று கோரி கடந்த 2017-ம் ஆண்டு ஒரு விண்ணப்பம் வந்தது.

இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த சிலைகள் பழங்கால சிலைகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதற்கான சான்று வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அண்மையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் தஞ்சை சிவாஜி நகரில் கணபதி என்பவர் நடத்தி வரும் கலைப்பொருள் விற்பனையகத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த விற்பனையகத்தில் பழங்கால சிலைகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கணபதியின் கலைப்பொருள் விற்பனையகத்தில் இருந்த பெருமாள், ரிஷபதேவர், சிவகாமி அம்மன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நந்தி, மகாவீரர், காலிங்க கிருஷ்ணர், நடன அம்மன் உள்பட 14 பழங்கால உலோக சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த சிலைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் கணபதியிடம் இல்லை. இதனையடுத்து, கணபதியை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்