ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர்; ரூ.30 ஆயிரம் பறிமுதல்

ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-30 21:08 GMT

திருச்சி கண்டோன்மெண்ட் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் மாலை சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் அந்த ஓட்டலில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மரக்கடையை சேர்ந்த இளங்கோவன் (வயது 61), உறையூர் காவல்காரன்தெருவை சேர்ந்த காளிமுத்து (57), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சலீம்கான் (54), எழில்நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (57), ஆண்டாள்வீதியை சேர்ந்த ஆனந்தன் (74), ஓலையூரை சேர்ந்த தினேஷ்குமார் (31), கே.கே.நகரை சேர்ந்த கருப்பையா (38), தில்லைநகரை சேர்ந்த ராமசாமி (70), தென்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (47), துவாக்குடியை சேர்ந்த தங்கராஜ் (41) உள்பட 14 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு, ரூ.30 ஆயிரத்து 620-ஐ பறிமுதல் ெசய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்