புகைப்பிடித்த 14 பேருக்கு அபராதம்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக புகைப்பிடித்த 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொதுஇடத்தில் நின்று சிலர் புகைப்பிடித்து கொண்டிருப்பதை பார்த்தனர். இதை தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக புகைப்பிடித்த 14 பேரை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் கடைகளின் முன்பு பொதுஇடத்தில் புகைப்பிடிக்க கூடாது என்று பலகை வைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.