மேலும் 14 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், ஆலத்தூர் வட்டாரங்களில் தலா 5 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 3 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் ஆவார்கள். இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மொத்தம் 58 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 57 பேர் வீட்டு தனிமையிலும், ஒருவர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 165 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.