இரும்பு கம்பிகள் வாங்கிவிட்டு ரூ.14½ லட்சம் மோசடி
இரும்பு கம்பிகள் வாங்கிவிட்டு ரூ.14½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் கணேஷ். இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், நான் வேலூரில் இரும்பு கம்பிகள் விற்பனை கடை நடத்தி வருகிறேன்.
கடந்த ஜனவரி மாதம் தர்மபுரியை சேர்ந்த இரும்பு கடை வியாபாரி என்னிடம் இருந்து ரூ.22½ லட்சத்துக்கு இரும்பு கம்பிகள் பெற்றார். அதற்கு முதற்கட்டமாக ரூ.8 லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதமுள்ள ரூ.14½ லட்சத்தை விரைவில் கொடுப்பதாக கூறி 4 மாதங்கள் ஆகியும் கொடுக்காமல் காலம் கடத்தி ஏமாற்றி வருகிறார்.அவரின் கடைக்கு சென்று பணத்தை கேட்டதற்கு தர மறுத்ததுடன் மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.