ரூ.14 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ரூ.14 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

Update: 2023-07-01 18:45 GMT

பரங்கிப்பேட்டை

மாங்குரோவ் காடுகள்

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் உலக புகழ் பெற்றதாகும். இங்குள்ள மாங்குரோவ்(சுரப்புன்னைமரம்) காடுகளை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருகின்றனர். இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இந்த சுற்றுலா மையத்தில் கண்களுக்கு விருந்தாக குட்டித்தீவுகளை போன்று ஆங்காங்கே வளர்ந்து நிற்கும் சுரப்புன்னை மரங்களை சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்து கண்டு மகிழ்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அதற்கேற்ப போதிய அடிப்படை வசதிகள் என்பதும் அவசியமாகிறது. ஆனால் இச்சுற்றுலா மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

அமைச்சர்கள் ஆய்வு

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். அதன் பேரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இ்ந்த சுற்றுலா மையத்தை மேம்படுத்த ரூ.14 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வேளாண்மை மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அப்போது நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான வரைபடங்களை பார்வையிட்ட அமைச்சர்கள் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவா்கள் சுற்றுலா மையத்தின் நிறை, குறைகளை ஊழியர்களிடம் கேட்டு அறிந்தார்.

அப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், பேரூராட்சி துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், தலைவர் மல்லிகா, பிச்சாவரம் சுற்றுலா மேலாளர் தினேஷ்குமார், சிதம்பரம் வனச்சரகர் இக்பால், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கலையரசன், முத்துபெருமாள், டாக்டர் மனோகர், ராஜேந்திரகுமார், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் தேன்மொழி சங்கர், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, துணை தலைவர் முகமது யூனுஸ், தாசில்தார் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் சுற்றுலாத்துறை, வனத்துறை அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்