குமரியில் 3 நாட்களில் ரூ.14 கோடிக்கு மது விற்பனை
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ.14 கோடிக்கு மது விற்பனையானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ.14 கோடிக்கு மது விற்பனையானது.
111 டாஸ்மாக் கடைகள்
குமரி மாவட்டத்தில் 111 டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடந்து வருகிறது. வழக்கமாக இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம்.
பண்டிகை காலங்கள், விழா நாட்களில் இந்த விற்பனை அதிகமாக நடைபெறும். இந்தநிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி 22-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. பலர் பெட்டி, பெட்டியாக மதுவையும், பீர்களையும் வாங்கிச் சென்றதை காண முடிந்தது. இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதை போன்று டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
ரூ.14 கோடிக்கு விற்பனை
இதனால் மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பீர் வகைகள், மதுபான வகைகள் அதிக அளவு விற்பனையானதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது 23-ந்தேதி அதிகளவு மது பாட்டில்கள் விற்று தீர்ந்தன.
கடந்த 22-ந்தேதி ரூ.3¾ கோடிக்கும், 23-ந் தேதி ரூ.5½ கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. தீபாவளி பண்டிகையான 24-ந் தேதி ரூ.4¾ கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.14 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.