வேனில் கடத்திய 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

வேனில் கடத்திய 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-24 17:08 GMT

போளூர்

வேனில் கடத்திய 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ்காரர்கள் குமார், கிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர் நேற்று இரவு போளூர்-செங்கம் சாலையில் 99 புதுப்பாளையம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போளூரில் இருந்து வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இவ்வாறு 14 மூட்டைகளில் கடத்திச்செல்லப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். செய்யாறு பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் குமார் என்பவர் ரேஷன் அரிசி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கவே அவரை போலீசார் தேடி வருகின்றனர்.அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்