மறுசீரமைப்பிற்கு பின் 1,370 வாக்குசாடிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குசாவடிகள் மறுசீரமைப்பிற்கு பின் 1,370 வாக்குசாடிகள் உள்ளன. புதிய வாக்குசாவடிகள் பட்டியலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டார்.

Update: 2022-08-30 18:35 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குசாவடிகள் மறுசீரமைப்பிற்கு பின் 1,370 வாக்குசாடிகள் உள்ளன. புதிய வாக்குசாவடிகள் பட்டியலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டார்.

வாக்குச்சாவடிகள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி மாவட்டத்தில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 303 வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 346 வாக்கு வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 385 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,370 வாக்குசாவடிகள் உள்ளன.

பரிசீலனை

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை 14.9.22-க்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், தாசில்தார்கள் தேர்தல் பிரிவு கார்த்திகேயன், ராமநாதபுரம் தாலுகா முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்