நீலகிரியில் 136 பயனாளிகளுக்கு ரூ.11¾ கோடியில் வங்கி கடன் உதவிகள்-அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

நீலகிரியில் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு வங்கி கடன் உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2023-09-07 19:45 GMT

ஊட்டி

நீலகிரியில் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு வங்கி கடன் உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கடன் வழங்கும் முகாம்

மாவட்ட தொழில் மையம் உள்பட பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராசில் நடைபெற்றது. இதற்கு ஆ.ராசா எம்.பி. முன்னிலை வகித்தார். இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடி, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 17 பயனாளிகளுக்கு ரூ.76.62 லட்சம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.5.4 கோடி, தாட்கோ மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.25.35 லட்சம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.24.85 லட்சம், விவசாய கடன் 7 பயனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம், சிறு- குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க 8 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம், 6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40.50 லட்சம் உள்பட மொத்தம் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு வங்கி கடன் உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு கடன் திட்ட இலக்கு ரூ.510 கோடியை அடைய மாவட்டங்கள் தோறும் கடன் வசதி விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது.

25 சதவீத மானியம்

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் கூடிய கடன்கள் வங்கி மூலம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் தேயிலை, மசாலா, காபித்தூள் தயாரித்தல் உள்பட பல்வேறு தொழில்கள் தொடங்கி சிறப்பாக நடத்தலாம். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சுயமாக தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, தாட்கோ பொது மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்