சிவகிரி:
சிவகிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயகிரி காந்தி தெருவை சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் காளியப்பன் (வயது 40) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அங்கு 40 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் அருண்குமார் என்பவர் ராயகிரி காமராஜர் சிலைக்கு கிழக்கு பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த போது மடக்கி சோதனையிட்டனர். அவரிடம் 95 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 135 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் சிவகிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.