மளிகை வியாபாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு-பெண்ணிடம் விசாரணை
மளிகை வியாபாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு போனது குறித்து பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூரமங்கலம்:
சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் ஜீவா நகரை சேர்ந்த மளிகை வியாபாரி கிருஷ்ணன் (வயது58). இவருடைய மனைவி சூரமங்கலம் போலீசில் அளித்த புகாரில், தன்னுடைய வீட்டில் 13 பவுன் நகை திருட்டு போனதாகவும், என்னுடைய கணவருக்கு தெரிந்த பெண் ஒருவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாகவும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் நகைகள் திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.