தடுப்பு சுவரில் வேன் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் காயம்
தடுப்பு சுவரில் வேன் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் ஜீவா நகர் கட்டபொம்மன் தெரு பகுதியை சேர்ந்த 15 பேர் கடந்த 18-ந்தேதி தங்களது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் திருச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை திருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துமணி (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார். வேன் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வேனில் இருந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த விபத்தில் வேன் டிரைவர் முத்துமணி, தலிச்சாபானு (2), அலியா ரிஸ்வானா (7), சையது ஆரிப் (13), முகமதுதிலிப் (30), சையது ஜெகதா (34), சகானாவ் (29), ரசிதாபேகம் (50), அகமதுகான் (55), அக்பர்கான் (60), பைரோன் பேகம் (28), சையது முஸ்தபா (32), மணிகண்டன் (32) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ராம்ஜி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.