கஞ்சா விற்ற தம்பதி உள்பட 13 பேர் கைது

சிவகாசியில் கஞ்சா விற்ற தம்பதி உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-11 19:27 GMT

சிவகாசி, 

சிவகாசியில் கஞ்சா விற்ற தம்பதி உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

7 பேர் கைது

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் பேட்டை தெருவில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிவகாசி முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்த நாகூர் மீரான் (வயது 33), கார்த்திக் என்கிற பேட்டை கார்த்திக் (39), செல்வம் என்கிற சேட்டை செல்வம் (22), மணிகண்டபிரபு என்கிற சப்பை (28), விஜயகணேஷ் (33), மதுரையை சேர்ந்த ஜெரீனாபேகம் (32), அவரது கணவன் மீரான்முகமது (43) ஆகியோர் 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்பிடித்தனர்.

பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர்.

கஞ்சா பறிமுதல்

இதேபோல் சிவகாசி டவுன் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி தலைமையில் பஸ் நிலையம் பின்புறம் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு சிவகாசி ஆனையூரை சேர்ந்த பாண்டி என்கிற கட்டப்பாண்டி (46), ஆறுமுகசாமி (35), பராசக்தி காலனி காஜாஷரீப் (32), சையது இப்ராகீம் (45), வீரபாண்டி (24), முனியசாமி (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்