விமானத்தில் கடத்த இருந்த ரூ.13¼ லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட இருந்த ரூ.13¼ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-11-08 19:23 GMT

திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட இருந்த ரூ.13¼ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பயணிகளிடம் சோதனை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் விமானங்களில் பயணம் செய்யும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று காலை இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் தங்கம் கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தங்கம் பறிமுதல்

இதையடுத்து பயணிகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது நிசார் என்பவர் தனது உடைமைகளில் மறைத்து தகடு மற்றும் உருளை வடிவிலான 259 கிராம் தங்கத்தை கடத்த இருந்தது, அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து ரூ.13 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்