12,987 வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12,987 வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்தனர்

Update: 2022-08-21 17:38 GMT

வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மை ஆக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 12,987 வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்