ஒரே நாளில் 12.17 செ.மீ. மழை பதிவு

ஒரே நாளில் 12.17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Update: 2023-09-29 19:34 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் மாலையும் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 12.17 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சி விமான நிலைய பகுதியில் 33.4 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக தேவி மங்கலத்தில் 2.2 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:-

கல்லக்குடி-5.4, லால்குடி-2.4, நந்தியாறு அணை-10.4, புள்ளம்பாடி-16.8, தேவிமங்கலம்-2.2, கோவில்பட்டி-4.2, நவலூர்குட்டப்பட்டு-3.5, துவாக்குடி ஐ.எம்.டி.ஐ.-12, பொன்மலை-8.2, திருச்சி விமான நிலையம்-33.4, திருச்சி சந்திப்பு-10.8, திருச்சி நகரம்-12.4, மாவட்டத்தின் சராசரி மழையளவு 5.07 ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்