1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
ராமநாதபுரம் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்ரியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் முத்துக்கிருஷ்ணன், குமாரசாமி, தேவேந்திரன் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழ மரத்துப்பட்டி சோதனை சாவடி பகுதியில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில் 30 பைகளில் தலா 40 கிலோ எடையுள்ள 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசியை ராமசாமிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சேகரித்துக் கொண்டு செல்வது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அரிசியை ஏற்றிக்கொண்டு வந்த மதுரை ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த காந்தி முத்து மகன் முத்துக்குமார் (வயது 46) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக மதுரை காமராஜர் சாலை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டி வேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.