கஞ்சா ஆயில் கடத்திய கேரள வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை- புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு

ராமநாதபுரத்தில் கஞ்சா ஆயில் கடத்திய வழக்கில் கேரள வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-05-05 19:04 GMT

ராமநாதபுரத்தில் பசும்பொன் ரெயில்வே கேட் அருகே கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி ராமநாதபுரம் பி.1 நகர போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 916 கிராம் கஞ்சா ஆயில் கடத்திய கேரளாவை சேர்ந்த சபிக் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரான ராமநாதபுரத்தை சேர்ந்த ஜாவித் ரகுமான் தப்பியோடினார். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டையில் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு லால் நேற்று தீர்ப்பளித்தார். இதில் சபிக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் ஜாவித் ரகுமானை விடுதலை செய்து உத்தரவிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட சபிக்கை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட குற்றவியல் சிறப்பு வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்