மேல்மலையனூர் அருகேவிவசாயி வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டில் 12 பவுன் நகைகள் திருடு போனது

Update: 2023-08-22 18:45 GMT


மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே கன்னலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். விவசாயி. இவரதுமனைவி கலாவதி (40). நேற்று முன்தினம் இரவு கலாவதி வீட்டினுள்ளும், தர்மலிங்கம் வீட்டின் வெளியே வராண்டாவிலும் தூங்கினர்.

நேற்று காலையில் அவர்கள் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 12¼ பவுன் நகைகள் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்