புகைப்பிடித்த 12 பேருக்கு அபராதம்

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புகைப்பிடித்த 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-07-07 19:30 GMT

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளுக்கு இடையூறாக நின்று கொண்டு சிலர் புகைப்பிடித்து கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து புகைப்பிடித்த நபர்களை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மொத்தம் 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்