பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-24 17:39 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் பகுதிகளில் பொது இடத்தில் சூதாடுவதாக மாவட்ட சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு பிரிவு போலீசார் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வயலோகம் பெரியகுளம் பகுதியில் உள்ள பொது இடத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் (வயது 46), வின்சென்ட் (42), பழனிச்சாமி (45), பாஸ்கர் (40), அர்ஜூனன் (36), உருவம்பட்டியை பகுதியை சேர்ந்த முருகேசன் (36), மற்றொரு முருகேசன் (35), கருப்பையா (35), அண்ணாநகரை சேர்ந்த விஜய் (31), முதலிபட்டியை சேர்ந்த சரவணன் (38), பெரிய செங்கப்பட்டியை சேர்ந்த சுந்தரம் (33), அன்னவாசலை சேர்ந்த சரவணன் (41) ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய அட்டைகள், ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்