மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. தற்போது நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.