12 இந்திய மீனவர்கள் கைது - மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் உள்பட 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-07-04 17:26 GMT

மீனவர்கள் கைது

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்.

விடுவிக்க நடவடிக்கை

கடந்த மாதம் 15-ந்தேதியன்று முடிவடைந்த, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க தொடங்கியுள்ளநிலையில், இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடி படகினையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலமாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்